• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வீடுதோறும் மூவண்ணக்கொடி என்பதை செயல்படுத்த அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடிகள் விற்பனை

प्रविष्टि तिथि: 08 AUG 2023 5:31PM by PIB Chennai

வீடுதோறும் மூவண்ணக்கொடி என்பதை செயல்படுத்த அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ரூ 25 என்ற விலையில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட உள்ளன. www.epostoffice.gov.in  என்ற இணையதளம் மூலம் 12ம் தேதி வரை மூவண்ணக்கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

வீடுதோறும் மூவண்ணக்கொடி என்ற இயக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்த சென்னை வடக்கு அஞ்சலகக் கோட்டத்தின் சார்பில்  மகளிர் பேரணி இன்று அண்ணா நகரில் நடைபெற்றது. தேசிய ஒற்றுமை மற்றும் பெருமிதத்தைப் பறைசாற்றும் விதமாக இந்தபேரணி அமைந்தது.

பேரணி நிறைவில், சென்னை அண்ணாநகர் முதன்மை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் திருமதி அனிதா பால்துரையிடம் மூவண்ணக்கொடி ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர்  திரு கி லட்சுமணன் பிள்ளை, உதவி கண்காணிப்பாளர் திருமதி முத்துமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

***


(रिलीज़ आईडी: 1946737) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English
Link mygov.in
National Portal Of India
STQC Certificate