• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் ரூ.24 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல்

प्रविष्टि तिथि: 01 DEC 2023 7:10PM by PIB Chennai

முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் ரூ. 24லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்தத் திட்டத்தில் தொழில் தொடங்க பிணை இல்லாமல்  கடன் பெற முடியும்  என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

   புதுச்சேரியில் 12 ஆவது நாளாக நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய வாகனப் பயண நிகழ்ச்சியில் இன்று பாகூரில்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பிரதமர் திரு நரேந்திர மோடி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டங்கள் குறித்து அனைத்து கிராம மக்களும் தெரிந்து கொள்ள வாகனப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மோடி உத்தரவாத வாகனம்  என பலரும் அழைக்கின்றனர். மக்களுக்கு மோடியின் உத்திரவாதம் பல வகைகளில் உதவியாக உள்ளது என்றார். துணை நிலை ஆளுநர் தலைமையில் கிராம மக்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக துணை நிலை ஆளுநர் பயனாளிகள் சிலரின் வீடுகளுக்கு சென்று கலந்துரையாடினார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டை வைத்திருந்த திரு ராஜசேகர் தனக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் காலில் அடிபட்டு விட்டது என்றும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு அட்டை இருந்ததால் இலவசமாக சிகிச்சை பெற்று இப்போது நடக்க முடிவதாகவும் தெரிவித்தார். தான் இன்று உயிரோடு நடமாட  பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று ராஜசேகர் தெரிவித்தார்.

    

 

    

***

AD/SMB/KRS


(रिलीज़ आईडी: 1981660) आगंतुक पटल : 119
Link mygov.in
National Portal Of India
STQC Certificate