அணுசக்தி அமைச்சகம்
முன்மாதிரி விரைவு அணுஉலையில் சாதனை
प्रविष्टि तिथि:
04 DEC 2025 6:19PM by PIB Chennai
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், முன்மாதிரி விரைவு அணு உலைக்கான ஆரம்ப எரிபொருள் ஏற்றுதல், முதல் உற்பத்தி மற்றும் குறைந்த சக்தி இயற்பியல் சோதனைகளை நடத்த 2025 அக்டோபர் 16 அன்று அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது 37 எரிபொருள் உபகரணங்களை உலைக்குள் ஏற்றும் பணி நடைபெறுகிறது. அணுசக்தித் தொழிலில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. 700 மெகாவாட் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் மற்றும் சிறிய மட்டு உலைகள் போன்றவற்றுக்கான பெரும்பாலான உபகரணங்களை இந்தியத் தனியார் நிறுவனங்களே உற்பத்தி செய்ய முடியும்.
சிறிய மட்டு உலைகள் உள்பட அனைத்து உலைகளிலிருந்தும் உருவாகும் கதிரியக்கக் கழிவுகளைப் பாதுகாப்பாக நிர்வகிக்க விரிவான திட்டம் நடைமுறையில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198944®=3&lang=1
****
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2199174)
आगंतुक पटल : 8