அணுசக்தி அமைச்சகம்
அணு உலைகளும் அவற்றின் பாதுகாப்பு தரநிலைகளும்
प्रविष्टि तिथि:
04 DEC 2025 6:17PM by PIB Chennai
தற்போது, மொத்தம் 13.6 ஜிகாவாட் திறன் கொண்ட 18 புதிய அணு உலைகள் கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவை 2031-32-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 700 மெகாவாட் உள்நாட்டு உலைகளும், வெளிநாட்டு ஒத்துழைப்புடன் சில உலைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
மத்திய பட்ஜெட் 2025–26-ல் அறிவிக்கப்பட்ட அணுசக்தி திட்டத்தின் கீழ், சிறிய அணு உலைகளின் (SMRs) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாபா அணு ஆராய்ச்சி மையம் 2033-க்குள் குறைந்தது ஐந்து உள்நாட்டுச் சிறிய மட்டு உலைகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் இலக்குடன், அவற்றின் வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தொழில்நுட்பச் செயல்விளக்கத்திற்காக, இந்த உலைகளின் முதன்மை அலகுகள் அணுசக்தித் துறையின் வளாகத்தில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சிறிய உலைகளின் செயல்விளக்க அலகுகள், அனுமதி கிடைத்த 60 முதல் 72 மாதங்களுக்குள் கட்டப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198939®=3&lang=1
****
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2199176)
आगंतुक पटल : 9