சுற்றுலா அமைச்சகம்
விஜயவாடாவில் சுற்றுலா அமைச்சகத்தின் கர்நாடக இசை விழா
प्रविष्टि तिथि:
05 DEC 2025 10:48AM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகம், சங்கீத நாடக அகாடமி மற்றும் ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை, ஆந்திர அரசின் கலாச்சாரத் துறை ஆகியவற்றின் ஆதரவுடன், மத்திய சுற்றுலா அமைச்சகம், 2025 டிசம்பர் 6, 7 ஆகிய நாட்களில் விஜயவாடாவில் கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் 2025 என்னும் கர்நாடக இசை விழாவை நடத்துகிறது.
மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவின், இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “தெலுங்கு இசை மரபுகளின் செழுமையைக் கொண்டாடுதல்”என்பதாகும்.
இரண்டு நாட்களில் 98 கலைஞர்களைக் கொண்ட மொத்தம் 18 இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. டிசம்பர் 7 ஆம் தேதி காலை 7:00 மணிக்கு துர்கா காட்டில் பஞ்சரத்ன கிருதிகளின் சிறப்பு விடியல் இசை நிகழ்ச்சி வழங்கப்படும். இதனை மல்லாடி சகோதரர்கள் வழிநடத்துவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199230®=3&lang=1
***
SS/PKV/KPG/KR
(रिलीज़ आईडी: 2199302)
आगंतुक पटल : 7