• Skip to Content
  • Sitemap
  • Advance Search
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 1:16PM by PIB Chennai

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-ல் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள், பிரதிநிதிகள் குழு, குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, செயற்கை நுண்ணறிவு குறித்த தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டது. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவின் திறனை அவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்த உச்சிமாநாடு அளவிலும் தாக்கத்திலும் பெரியது என்று பிரதிநிதிகள் விவரித்தனர். அப்போது பேசிய குடியரசுத் துணைத் தலைவர், செயற்கை நுண்ணறிவு, துல்லியத்தை மேம்படுத்தி, வேலை செய்வதை எளிதாக்கி, சமூகத்திற்கு நன்மைகளை வழங்குகிறது என்று கூறினார். இந்தியா இந்த உச்சிமாநாட்டை நடத்துவது பிரதமர் திரு நரேந்திர மோடியின் குறிப்பிடத்தக்க முயற்சியாகும் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கும் இங்குள்ள மக்களுக்கும் சரியான வாய்ப்புகள் வழங்கப்படும்போது, அவர்களின் ஆற்றல் வரம்பற்று வெளிப்படும் என்று அவர் தெரிவித்தார். வரும் ஆண்டுகள் தேசத்திற்கு ஒரு வெற்றிகரமாதாக இருக்கும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு .சி. பி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230655&reg=3&lang=1

***

AD/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230723) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate