• Skip to Content
  • Sitemap
  • Advance Search
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம் - மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 1:36PM by PIB Chennai

உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்ப குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வர்த்தகத் துறையின் முதன்மை முயற்சியான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தையும் அதன் கீழ் கூடுதல் முயற்சிகளையும் மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று (20.02.2026) தொடங்கி வைத்தார். இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி சக்தியாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் இந்த முயற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், செயற்கை நுண்ணறிவு, எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்த உலகளாவிய உரையாடல்களில் இந்தியாவை உறுதியாக நிலைநிறுத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.  செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், குவாண்டம் கணினி, தரவு மையங்கள் ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றங்கள் இந்தியாவின் இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைத் ஏற்படுத்தி முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் விரிவடைந்து வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான சந்தை அணுகலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்று திரு பியூஷ் கோயல் சுட்டிக் காட்டினார். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 70 சதவீதமும், உலக வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கும் இப்போது ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவிற்கு எளிதாகி உள்ளது என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230664&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230763) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate