• Skip to Content
  • Sitemap
  • Advance Search
PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அன்றாட சவால்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் நடைமுறை தீர்வுகளை புத்தொழில் நிறுவனங்கள் வெளிப்படுத்துகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 1:53PM by PIB Chennai

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026, புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. அங்கு பார்வையாளர்கள் அரங்குகளுக்குள் திரண்டு, உரையாடல்களைத் தூண்டி, அரங்கம் முழுவதும் புதுமைகளை ஆராய்ந்தனர்.

கண்காட்சி அரங்குகளில் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையிலான விவாதங்கள் ஒரு துடிப்பான வேகத்தில் நகர்ந்தது. நேரடி செயல் விளக்கங்களும் இடம்பெற்றன. 

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நடைமுறை பொது பயன்பாடுகளாக மாற்றுவதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அரங்கம் முழுவதும், யோசனைகள் மட்டும் முன்வைக்கப்படவில்லை. அவை நிஜ உலக பயன்பாடுகளை மையமாகக் கொண்டு சோதிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

போக்குவரத்து, கல்வி, நிர்வாகம், உள்கட்டமைப்பு, உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தக்கூடிய நடைமுறை தீர்வுகளாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை மாற்றுவதற்கான பரந்த தேசிய முயற்சியை இது பிரதிபலிக்கிறது.

அன்றாட வாழ்க்கையில் அறிவார்ந்த தொழில்நுட்பங்களின் நிலையான ஒருங்கிணைப்பை இது பிரதிபலிக்கிறது. இந்த படிப்படியான ஒருங்கிணைப்பில்தான் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் செயற்கை நுண்ணறிவின் நீடித்த பயன்பாடு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230668&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230855) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali
Link mygov.in
National Portal Of India
STQC Certificate