• Skip to Content
  • Sitemap
  • Advance Search
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு வளங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட பொது நல விளைவுகளை நோக்கி அமைந்திருக்க வேண்டும் - நிபுணர்கள் கருத்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 2:42PM by PIB Chennai

"பொது நலன் சார்ந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல்: கணினி வளங்களை சமமாக அணுகுவதற்கான ஊக்க நிதி" என்ற அமர்வு முதலில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் நடைபெற்றது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், எதிர்காலங்களுக்கான கணக்கீட்டு வளங்கள்" என்ற தலைப்பில் செயல்பாட்டு அறிக்கையை வெளியிடப்பட்டார். இந்த விவாதத்தில் மூத்த அதிகாரிகள், நிறுவனங்கள், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் பங்கேற்றனர்.

புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும் எனவும் இந்த மாற்றம் சமமானதாகவும், உள்ளடக்கியதாகவும், பொது நலனுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதைய உலகளாவிய உரையாடலின் மையத்தில் இதுதான் உள்ளது என அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு வளங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட பொது நல விளைவுகளை நோக்கி அமைந்திருக்க வேண்டும் என்று இதில் பங்கேற்ற நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த அமர்வு, மனித மூலதனம், பகிரப்பட்ட கணினி உள்கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைந்து இயங்கக்கூடிய நிர்வாக கட்டமைப்புகள் ஆகியவை செயற்கை நுண்ணறிவை உலகளாவிய பொது நன்மையாக மாற்ற உதவும் என்று எடுத்துக் காட்டியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230689&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230860) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu , Kannada
Link mygov.in
National Portal Of India
STQC Certificate