• Skip to Content
  • Sitemap
  • Advance Search
உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அசாமில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 4:27PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று (20.02.2026) அசாமின் நாதன்பூர் கிராமத்தில் ₹6,839 கோடி செலவில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், எல்லை கிராமங்கள் நாட்டின் "கடைசி கிராமம்" என்று குறிப்பிடப்பட்ட ஒரு காலம் இருந்தது என்று அவர் கூறினார். துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் முதல் கட்டத்தின்கீழ், எல்லையில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இந்தியாவின் கடைசி கிராமம் அல்ல, முதல் கிராமம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி மாற்றியதாக திரு அமித் ஷா கூறினார்.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், அசாமில் உள்ள 140 கிராமங்கள் உட்பட 17 மாநிலங்களில் 1,954 கிராமங்களின் மேம்பாட்டுக்கு ₹6,900 கோடி செலவிடப்படும் என்று திரு அமித் ஷா தெரிவித்தார். இந்த திட்டத்தில் அருணாச்சல பிரதேசம், பீகார், குஜராத், ஜம்மு காஷ்மீர், லடாக், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் உள்ள எல்லை கிராமங்கள் அடங்கும் என்று அமைச்சர் கூறினார்.

முந்தைய அரசுகள் அசாம் மாநில வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்று திரு அமித் ஷா தெரிவித்தார். இந்த அரசின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், முந்தைய அரசுகள் 50 ஆண்டுகளில் சாதிக்க முடியாத விஷயங்கள் சாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230734&reg=3&lang=1

***

TV/PLM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2230924) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Khasi , English , Urdu , Assamese , Gujarati
Link mygov.in
National Portal Of India
STQC Certificate