சுற்றுலா அமைச்சகம்
உத்தரப் பிரதேசத்தின் கோவர்தன், மதுராவில் ப்ரசாத் திட்டங்களை மத்திய சுற்றுலா அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி காணொலி மூலம் திறந்து வைத்தார்
Posted On:
07 JAN 2022 7:08PM by PIB Chennai
சுற்றுலா அமைச்சகத்தின் ப்ரசாத் திட்டத்தின் கீழ் கோவர்தன், மதுராவின் மேம்பாட்டின் ஒரு பகுதியாக கோவர்தன் பேருந்து நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் சுற்றுலா மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் திரு. அஜய் பட் ஆகியோருடன் இணைந்து மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு. ஜி .கிஷன் ரெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய அவர், ப்ரசாத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 25 சதவீதம் அளவுக்கு, அதாவது கிட்டத்தட்ட ரூபாய் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள், யாத்திரைகள், ஆன்மீக மற்றும் பாரம்பரிய புத்தாக்கத்திற்காக உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டிற்கு இது வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நம் உடலில் இருந்து உயிரை பிரித்து எடுத்துவிட்டால் வேறு எதுவும் மிச்சம் இருக்காது. நமது நாட்டின் ஆன்மீக பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாப்பது இதற்கு ஒப்பானதாகும். பிரதமர் நரேந்திர மோடி இதை முன்னெடுத்து சென்று நமக்கு வழிகாட்டுகிறார்," என்றார்.
ராமாயணம் மற்றும் புத்தர் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக பாதைகளில் சுற்றுலா உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்திற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788425
****************************
(Release ID: 1788456)