வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூரு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளுக்கான திட்டங்களை மாநில அரசின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசு பரிசீலிக்கும்- அமைச்சர் திரு மனோகர் லால்

Posted On: 23 MAY 2025 2:56PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சார அமைச்சர் திரு மனோகர் லால் இன்று பெங்களூருவில் பல்வேறு நகர்ப்புற கட்டுமானப் பணிகளின் செயல்திறன் குறித்து மதிப்பாய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கர்நாடக மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர திட்டமிடல் துறை அமைச்சர் திரு பைரதி சுரேஷ், அம்மாநில நகராட்சித்துறை அமைச்சர் திரு ரஹீம் கான், வீட்டுவசதித்துறை அமைச்சர் திரு பி.இசட். ஜமீர் அகமது கான், எரிசக்தித்துறை அமைச்சர் திரு கே.ஜே. ஜார்ஜ், மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு துஷார் கிரி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கர்நாடகா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் திருப்தி தெரிவித்தார். மாநில அமைச்சரவையால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வரைவு அறிக்கையைப் பெற்ற பின்பு பெங்களூரு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம்-2 திட்டத்தின் திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு குறித்து மத்திய அரசு ஆய்வு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

பெங்களூரு மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டப் பணிகளுக்கான திட்ட  ஒப்புதல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், தற்போது பெங்களூரில் சுமார் 75 கி.மீ தொலைவிலான மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. மேலும் 145 கி.மீ தொலைவிற்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு ரூ.15,600 கோடி செலவில் 45 கி.மீ தொலைவிற்கான மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130718  

-----

SG/TS/SV/KPG/RR


(Release ID: 2130775)
Read this release in: English , Urdu , Hindi , Kannada