அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கடல்சார் மற்றும் அது சார்ந்த அறிவியல் துறையில் வளர்ந்து வரும் ஆராய்ச்சி குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கு- சி.எஸ்.ஐ.ஆர் - தேசிய அறிவியல் தொடர்பியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய கடல்சார் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன

Posted On: 29 MAY 2025 12:19PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய அறிவியல் தொடர்பியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமானது கோவாவில் உள்ள தேசிய கடல்சார் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து,  மே 27 - ம் தேதி கடல்சார் மற்றும் அது சார்ந்த அறிவியல் துறையில் வளர்ந்து வரும் ஆராய்ச்சி எல்லைகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. "புவி-கடல்சார் அறிவியலுக்கான இந்திய ஆய்விதழ்(IJMS) " பயிலரங்கின் மையப் பொருளாக இருந்தது‌. இந்த பயிலரங்கு, கடல்சார் அறிவியல் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், உள்நாட்டு அறிவுசார்  வெளியீடு மற்றும் தற்சார்பு இந்தியாவிற்கான நீடித்த ஆராய்ச்சி நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காகவும் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்துள்ளது.

பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இந்தப் பயிலரங்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் புஸ்பாஞ்சலி திரிபாதி வரவேற்புரை  ஆற்றினார். அந்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், சுயசார்பு கொண்ட அறிவார்ந்த வெளியீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "எங்கள் நிறுவனத்தின் அறிவுசார்  ஆராய்ச்சி இதழ்கள், ஆசிரியர்கள், வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதுடன், பசுமை, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய  அணுகல் மாதிரியை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அர்ப்பணிப்புடன்  கூடிய முன்னணி இதழான இந்தியன் ஜர்னல் ஆஃப் ஜியோ-மரைன் சயின்சஸ், இந்தப் பயிலரங்கு வாயிலாக, இந்தியாவில் கடல்சார் அறிவியல் துறையின் மீது கவனம் செலுத்துகிறது என்றார். இங்கு நாங்கள் இளம் விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் அவர்களது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட ஊக்குவித்து வருவதாகவும்" அவர் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய அறிவியல் தொடர்பியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின்  இயக்குனர் பேராசிரியர் சுனில் குமார் சிங், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் கடல்சார் ஆராய்ச்சியின் முக்கிய பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். "இந்தியா ஒரு பெரிய பொருளாதார நாடாக மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், நீலப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் நாட்டின் அறிவியல் சமூகம் அது தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  உள்நாட்டில் இருந்து வெளியிடப்படும் இதழ்கள் சர்வதேச இதழ்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்றும், சர்வதேச அளவிலான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அத்தகைய முயற்சிகள் வாயிலாக எதிர்காலத்தில் இதற்கான இலக்கை எட்டுவது சாத்தியமாகும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பயிலரங்கில் சிறப்புரையாற்றிய கோவா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஹரிலால் பி. மேனன், பரந்து விரிந்துள்ள  கடற்கரைப் பகுதிகள், பன்முகத்தன்மை கொண்ட கடல்சார் சூழல் அமைப்புகளைக் கொண்ட இந்தியாவில், அடிப்படை மற்றும் பயன்பாட்டு அம்சங்களைக் கையாளும் வகையில், கடல்சார் ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு நாட்டின்  கல்வித்துறை முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும், குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் டாக்டர் ஹர்ஷ் கே. குப்தா தனது உரையில், “இந்திய புவி-கடல் அறிவியல் இதழ் கடந்த 25 ஆண்டுகளில் கடல்சார் அறிவியலில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் குறித்த சிறப்பு இதழை வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதிலுமிருந்து அத்துறை சார்ந்த பாட நிபுணர்களை அழைத்து தரமான கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்றும், இது அந்த இதழுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் கூறினார். நமது முயற்சிகளை ஒன்றிணைத்தால், வெளியீட்டின் தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும்” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய அறிவியல் தொடர்பியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியும் ஆராய்ச்சி இதழின் தலைவருமான டாக்டர் சாரு வர்மா, இந்தப் பயிலரங்கின் தொடக்க அமர்வில் நன்றி தெரிவித்தார்.

இதில் சிறப்புரையாற்றிய மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் நிர்மால்யா மஜும்தார், உள்நாட்டு அறிவுசார் இதழின் வெளியீட்டை மேம்படுத்துவதில், அந்நிறுவனத்தின் பங்களிப்புகள் குறித்து  விளக்கினார். தொழில்நுட்பம் தொடர்பான அமர்வுகளில் இந்த இதழின் ஆசிரியர் டாக்டர் தினேஷ் வெலிப் கலந்து கொண்டு, ஆய்விதழ் ஒன்றை  அறிமுகப்படுத்தினார். கடல்சார் மற்றும் அது சார்ந்த அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிப்  பணிகளை மேம்படுத்துவதில் அவரது பங்களிப்பும் இருந்தது. மத்திய புவிசார்-அறிவியல் அமைச்சகத்தின்   திட்ட இயக்குநர் (தொடர்பியல்) டாக்டர் பவ்யா கன்னா, பயனுள்ள அறிவார்ந்த எழுத்து மற்றும் தொடர்பியல் குறித்த நுண்ணறிவுகளை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132240

******

AD/TS/SV/KPG/RR


(Release ID: 2132317) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi