நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தேசிய சோதனைக் கூடத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ட்ரோன் சான்றிதழ்களை மத்திய அமைச்சர் வழங்கவுள்ளார்
प्रविष्टि तिथि:
08 SEP 2025 2:46PM by PIB Chennai
தேசிய சோதனைக் கூடத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ட்ரோன் சான்றிதழ்களை 2025 செப்டம்பர் 10 அன்று மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி வழங்கவுள்ளார்.
இந்த சான்றிதழ்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளார். மேலும், ட்ரோன்களின் வகை மாதிரிக்கான சான்றிதழ் இந்திய தரக்கவுன்சில் மூலம், தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வலுவான, பாதுகாப்பான, சர்வதேச ரீதியில் போட்டித்தன்மை கொண்ட ட்ரோன் சூழல் அமைப்பை ஊக்குவிப்பது என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை கொண்ட ட்ரோன் விதிகள் 2021-க்கு இணங்க இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164612
***
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2164786)
आगंतुक पटल : 23