தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் பஜார் ஆதரவிலான இந்தியாஜாய் பி2பி 2025, இந்தியாவின் படைப்பாக்க பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
11 NOV 2025 4:50PM by PIB Chennai
வேவ்ஸ் பஜார், தயாரிப்பாளர் பஜார், ஆஹா ஆகியவற்றின் ஒத்துழைப்பில் இந்தியாஜாய் நிகழ்ச்சியில் இந்திய திரைப்பட சந்தை, வேவ்ஸ் அனிமேஷன் பஜார் ஆகியவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இது இந்தியாஜாய் பி2பி 2025 முன் முயற்சியின் முக்கிய அங்கமாகும். இது அனிமேஷன், காட்சிப் படிமங்கள், கேமிங், காமிக்ஸ் மற்றும் திரைப்பட தொழில் துறையில் ஐதராபாதின் நிலையை மேலும் வலுப்படுத்துவதாக இருந்தது.
இந்த ஆண்டின் நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து 120 விற்போரும், 35 வாங்குவோரும் பங்கேற்றனர். இது இணை தயாரிப்பு, உள்ளடக்க உரிமம், உத்திசார் ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கு வலுவான ஒரு தளத்தை உருவாக்கியது. வேவ்ஸ் அனிமேஷன் பஜார், இந்திய திரைப்பட சந்தை ஆகியவற்றுடன் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகளுக்கு ஆதரவாக ஸ்பிரவ்ட்ஸ் ஸ்டுடியோ ரூ.6 கோடி நிதியை இந்த நிகழ்வில் அறிவித்தது.
நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, இந்த நிகழ்வு பொழுதுபோக்கு தொழில்துறையின் அனைத்து பிரவுகளுக்கும் பயனளிக்கும் என்று நம்புவதாக கூறினார். வாங்குவோரையும், விற்போரையும் ஒரே இடத்திற்கு கொண்டு வருவது இந்திய பொழுதுபோக்கு வர்த்தகத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும். இந்திய கிரிக்கெட் போட்டியை ஐபிஎல் புரட்சிகரமாக மாற்றியது போல், படைப்பாக்கத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் வேவ்ஸ் முன்முயற்சி, பொழுதுபோக்கு தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
திரு சஞ்சய் ஜாஜுவுடன் கலந்துரையாடிய இளம் படைப்பாளிகள், தங்களின் படைப்பாக்க பயணங்கள் மற்றும் புதிய முயற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188823
***
SS/SMB/RK/SH
(रिलीज़ आईडी: 2188911)
आगंतुक पटल : 32