சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காங்டாக்கில் சர்வதேச சுற்றுலா கண்காட்சி நவம்பர் 13 முதல் 16 வரை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 12 NOV 2025 11:20AM by PIB Chennai

வடகிழக்கு பிராந்தியத்திற்கான 13-வது சர்வதேச சுற்றுலாக் கண்காட்சி சிக்கிம் மாநிலம் காங்டாக்கில்  2025 நவம்பர் 13 முதல் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியை சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங், அருணாசலப்பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு  ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சக மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு வடகிழக்குப் பிராந்தியத்தின் சுற்றுலா அம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச சுற்றுலா கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியின் போது இப்பிராந்தியத்தின் வளமான இயற்கை அழகு, கலாச்சார பன்முகத் தன்மை. சாகச சுற்றுலா வாய்ப்புகள், உள்ளிட்டவை குறித்து விளக்கப்படுகிறது.

இந்த சர்வதேச கண்காட்சியில் ஸ்பெயின், தாய்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, வியட்நாம் உள்ளிட்ட 19 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189088   

***

SS/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2189320) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Nepali , Assamese , Telugu