சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல்: வேளாண் துறையின் முக்கிய செயல்பாடுகளும் சாதனைகளும்

Posted On: 07 JUN 2025 4:38PM by PIB Chennai

"விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, விவசாயச் செலவைக் குறைப்பது, விதை முதல் சந்தை வரை விவசாயிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவது இந்த அரசின் முன்னுரிமையாகும்."

- பிரதமர் நரேந்திர மோடி

 

விவசாயமானது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக உள்ளது. கோடிக் கணக்கானவர்களின் வாழ்க்கையை நிலைநிறுத்தி நாட்டின் அடையாளத்தை வடிவமைக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் விவசாயத் துறை விதை முதல் சந்தை வரை என்ற தத்துவத்தில் வேரூன்றி ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் சிறு விவசாயிகள், பெண்கள் தலைமையிலான குழுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது. அதே நேரத்தில் இந்தியாவை உலகளாவிய விவசாய முன்னணி நாடாகவும் ஆக்குகிறது.

 

நவீன நீர்ப்பாசனம் மற்றும் கடன் அணுகல் முதல் டிஜிட்டல் சந்தைகள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வரை, இந்தியா நவீன விவசாயத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

 

எல்லாவற்றிற்கும் மேலாக, மனநிலை மாறிவிட்டது. விவசாயிகள் இப்போது இந்தியாவின் வளர்ச்சியின் முக்கிய பங்குதாரர்களாகவும் உந்துசக்திகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான பட்ஜெட் மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. 2013–14ல் ₹27,663 கோடியிலிருந்து 2024-25-ல் ₹1,37,664.35 கோடியாக வேளாண் நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இந்த கணிசமான அதிகரிப்பு விவசாயத் துறையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

 

* இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 2014–15 ஆம் ஆண்டில் 265.05 மில்லியன் டன்னிலிருந்து 2024–25 ஆம் ஆண்டில் 347.44 மில்லியன் டன்னாக சீராக வளர்ச்சி பெற்றுள்ளது.

 

* முக்கிய பயிர்களில் அரிசி, கோதுமை, சோளம், பஜ்ரா, மக்காச்சோளம், ராகி, பார்லி, துவரம் பருப்பு, ஏனைய பருப்பு வகைகள், நிலக்கடலை, சோயாபீன், கடுகு, எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி, சணல் ஆகியவை அடங்கும்.

 

* நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது.

 

* கடந்த 11 ஆண்டுகளில், அரசாங்கம் பருப்பு வகைகள் துறையில் குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

* மெகா உணவு பூங்கா திட்டத்தின் கீழ் மெகா உணவு பூங்காக்கள் 2014-ல் 2 இல் இருந்து 2025-ல் 41 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

* நமோ ட்ரோன் தீதி என்பது பெண்கள் தலைமையிலான சுய உதவிக்குழுக்களை (SHGs) விவசாய சேவைகளை வழங்க ட்ரோன் தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்திய துறை திட்டமாகும். இந்தத் திட்டம் 2024-25 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15000 பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு விவசாய நோக்கங்களுக்காக விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை வழங்குவதற்காக ட்ரோன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

* உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்கை இந்தியா கொண்டு. மீன் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

 

 

* பால்வளத் துறை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதமான 5.7 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது உலக சராசரியான 2 சதவீதத்தை விட கணிசமாக அதிகமாகும். உலக பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் 25% பங்களிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தி 63.56% அதிகரித்துள்ளது.

 

* தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம் தேனீ வளர்ப்பின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022–23 ஆம் ஆண்டில் இந்தியா 1.42 லட்சம் மெட்ரிக் டன் தேனை உற்பத்தி செய்து 79,929 மெட்ரிக் டன்களை ஏற்றுமதி செய்தது.

விவசாயிகள் இந்தியாவின் விவசாயத் துறையின் முதுகெலும்பாக உள்ளனர், இத்துறை தேசத்திற்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. முற்போக்கான சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வலுவான அரசு முயற்சிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் மேம்பட்ட செயல்திறனையும் ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும், வளமானவர்களாகவும் மாற அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள்  நவீன விவசாயம் மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105745

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099696

 

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=149055

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116177

 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/feb/doc2025218505001.pdf

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113716#:~:text=Launched%20in%202020%2D21%2C%20the,access%2C%20increasing%20farmers'%20income.

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1943165#:~:text=The%20Pradhan%20Mantri%20Kisan%20Samriddhi,other%20machines%20related%20to%20farming.

 

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1982721

https://www.mofpi.gov.in/en/Schemes/mega-food-parks

 

https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=149135

 

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1908343

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113351

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117330#:~:text=The%20implementation%20of%20the%20Rashtriya,million%20tonnes%20in%202023%2D24.

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097307#:~:text=Ethanol%20blending%20by%20Public%20Sector,%25in%20ESY%202023%2D24.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097307#:~:text=Ethanol%20blending%20by%20Public%20Sector,%25in%20ESY%202023%2D24.

 

https://sansad.in/getFile/annex/267/AU3493_GsYTWD.pdf?source=pqars

 

***

AD/TS/PLM/DL


(Release ID: 2134833)